சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் வருகிற சனிக்கிழமை (7–ந் தேதி) நடைபெறவுள்ளது. மே மாதம் 10–ந்தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு மாதமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சில மின்சார ரயில்கள் பகல் வேளையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மதியம் 12.43, 12.56, 1.23, 1.35 மணி சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

வாரநாட்களில் அலுவலகம் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் வாரத்தின் இறுதி நாட்களில் பராமரிப்பு பணி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

English Summary: Electric Trains will be cancelled between Chennai beach to Chengalpattu on Weekends for Maintenance work.