Vijay_Shruti_thmni_2004465fவிஜய்,ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நடித்த ‘புலி’ திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு சிங்கிள் பாடல் இன்று ரிலீஸாகவுள்ளது. ஆனால் அதற்கு முன்னர் இந்த பாடலின் முழு வரிகளை பாடலை எழுதிய வைரமுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். விஜய், ஸ்ருதிஹாசன் பாடிய இந்த பாடலின் வரிகள் முழுவதும் இதோ:

விஜய்: வானவில் வட்டமாகுதே
வானமே கிட்ட வருதே

ஸ்ருதிஹாசன் : மேகங்கள் மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே

விஜய்: : இரவெல்லாம் வெயிலாகிப் போக
பகலெல்லாம் இருளாகிப் போக
காலங்கள் வேஷம் போடுதே
அடி ஏண்டி ஏண்டி என்ன மாத்துற?
ரெண்டு பூவக் கொண்டு என்னத் தாக்குற
அடி ஏண்டி ஏண்டி கண்ணச் சாய்க்கிற?
எம் புத்திக்குள்ள கத்தி வீசுற
*
விஜய்: : கட்டி கட்டி தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி

ஸ்ருதிஹாசன் : கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி

விஜய்: : ஏ அழகின் மானே
வா மடிமேலே

ஸ்ருதிஹாசன் : புள்ளிமான் புடிபட்டுப் போச்சு
புலி கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது?

விஜய்: : ஏண்டி ஏண்டி என்ன மாத்துற
ஏண்டி ஏண்டி என்ன ஏய்க்கிற
ஏண்டி ஏண்டி பூவாப் பூக்குற
ஏண்டி ஏண்டி பூவால் தாக்குற

விஜய்: : பிஞ்சு மொழி சொல்லச் சொல்லப்
பேச்சுக்குள்ள தோடி ராகம்

ஸ்ருதிஹாசன் : முத்தமிட்டு மூச்சுவிட்டா
மூச்சுக்குள்ள ரோஜா வாசம்

விஜய்: : தேன் வழியும் பொன்னே
வா கமலப் பெண்ணே

ஸ்ருதிஹாசன் : இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய்
மடிதொட்டு எங்கே போகிறாய்?

விஜய்: : ஏண்டி ஏண்டி என்ன மாத்துற
ஏண்டி ஏண்டி என்ன ஏய்க்கிற
ஏண்டி ஏண்டி பூவாப் பூக்குற
ஏண்டி ஏண்டி பூவால் தாக்குற

English Summary:Puli lyrics of the song sung by Vijay srutihacan