vaalu-release-dateசிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கிய ‘வாலு’ திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு ரிலீஸாகாமல் உள்ளது. கடந்த 17ஆம் தேதி வாலு திரைப்படம் உறுதியாக ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம் உள்பட மொத்தம் ஏழுபேர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால், படத்தின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள டி.ராஜேந்தர், வழக்கு போட்ட அனைவரிடமும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவரும் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டதாகவும், எனவே ‘வாலு’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை கூட்டி ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

சிம்பு, ஹன்சிகா,சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள ‘வாலு’ படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை சிம்புவே எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:’Withdrawal of cases against valu. Soon Release