முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023-ல் துவங்கி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *