இரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு முக்கியமான 8 எக்ஸ்பிரஸ் இரயில்களில் கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டி மற்றும் ஏ.சி. பெட்டிகள் நிரந்தரமாக இணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை நேற்று விடுத்துள்ள தென்னக ரயில்வே எந்தெந்த ரயில்களில் எந்த பெட்டிகள் இணைக்கப்படுகின்றன என்பது குறித்த விவரங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.ரயில் எண் 12647/ 12648: கோவை – ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் – 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி மார்ச் 22 ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.
2.ரயில் எண் 12664/ 12663: திருச்சி – ஹெளரா – திருச்சி எக்ஸ்பிரஸ் – ஒரு ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டி மார்ச் 20 முதல் இணைக்கப்படும்.
3.ரயில் எண் 12682 /12681: கோவை – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் – 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி மார்ச் 20 முதல் இணைக்கப்படும்.
4.ரயில் எண் 12689/ 12690: சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் – இரண்டு 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி மார்ச் 20 முதல் இணைக்கப்படும்.
5. ரயில் எண் 16031/ 16032: சென்னை சென்ட்ரல் – ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் – ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி மார்ச் 18 முதல் இணைக்கப்படும்.
6. ரயில் எண் 16093/ 16094: சென்னை சென்ட்ரல் – லக்னௌ எக்ஸ்பிரஸ் – ஒரு 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி மார்ச் 21 முதல் இணைக்கப்படும்.
7. ரயில் எண் 16733/ 16734: ராமேசவரம் – ஓக்கா எக்ஸ்பிரஸ் – ஒரு 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி மார்ச் 20 முதல் இணைக்கப்படும்.
8. ரயில் எண் 22651/ 22652: சென்னை சென்ட்ரல் – பழனி எக்ஸ்பிரஸ் – ஒரு 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி மார்ச் 18 முதல் இணைக்கப்படும்.
English Summary: Additional Coaches have been added to these trains permanently: Southern Railway.