சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்சாலை கடந்த சில நாட்களுக்கு முன் மூடப்பட்டது. இந்த ஆலையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில் இந்த தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள், மூலப்பொருள்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கக் கோரி அதன் ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், நோக்கியா நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிந்த ஐந்து ஊழியர்கள் இணைந்து தாக்கல் செய்த இந்த மனுவில் நோக்கியா தொழிற்சாலையின் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவி தொழிலாளர் நல ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நிறுவனம் திறக்கும் வரை அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

English Summary : Madras High Court issues notice to Nokia