கடந்த மாதம் வெளியான அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான ‘என்னை அறிந்தால்’ உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்த படம் வெளியாகி ஆறு வாரங்கள் கடந்த பின்னரும் சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் நல்ல வசூல் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை ஒரு இணையதளம் அதிகாரபூர்வமாக வெளியிட உரிமை பெற்றுள்ளது.

ஹீரோடக்கீஸ்.காம் (herotalkies.com)என்ற இணையதளம் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை இந்தியா தவிர உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த இணையதளம் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன டெக்னாலஜியுடன் 1080p HD தொழில்நுட்பத்தில் ‘என்னை அறிந்தால்’ படம் இந்த இணையதளத்தில் கிடைக்கும். இந்த இணையதளம் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை செலுத்தி இந்த படத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாத வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இந்த இணையதள சேவையை பயன்படுத்தி தல அஜீத் படத்தை பார்த்து கொள்ளலாம்.

English Summary : Ajith’s ‘Yennai Arindhaal Movie ” released on the Internet