மார்ச் மாதம் 28ஆம் தேதி ராமநவமியும் மற்றும் இந்த நிதியாண்டின் கணக்கு இறுதி மற்றும் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய தினங்கள் அடுத்தடுத்து வருவதால் வங்கிகளுக்கு தொடர்ந்து ஏழு நாட்கள் விடுமுறை என்று பரவி வரும் செய்திகளுக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் விளக்கம் அளித்துள்ளார்.

மார்ச் 28ஆம் தேதி ராமநவமி அன்று தமிழக வங்கிகள் எப்பொழுதும்போல் செயல்படும் என்றும், நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31ஆம் தேதியும் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் ஏப்ரல் 1,2.3 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை என்றும், ஏப்ரல் 4ஆம் தேதி சனிக்கிழமையாக இருப்பினும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அன்றைய தினம் முழுவதும் வங்கிகள் செயல்பட வங்கி ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக மூன்று விடுமுறை தினங்கள் வருவதால் ஏ.டி.எம். இயந்திரங்களில் அதிக பணத்தை நிரப்ப வங்கிகள் முடிவு செய்துள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

English Summary: Is there 7 days consecutive holiday for banks?