சென்னை நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங்கள் மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, நங்கநல்லுார் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில், வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதில், 1,000 இருசக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் வரை நிறுத்த முடியும். இந்த நிறுத்தத்தில், இன்று (ஏப்ரல் 28) முதல், மே 31ம் தேதி வரை, மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி, எந்த கட்டணமும் இன்றி வாகனங்களை பயணிகள் நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *