எளிதில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் குப்பைகள் நாளுக்கு நாள் சென்னையில் பெருகி வரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் இருந்து எடுத்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் பைகளுக்கு ஆகஸ்ட் 15 முதல் முதல் சென்னையில் ‘குட்பை’ சொல்லி தடை விதித்து உள்ளது
சென்னையில் பெரும்பாலும் ஓட்டல்கள், திருமண விழாக்களில் தான் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றது. ஒவ்வொரு நாளும் சென்னையில் சுமார் 5,000 டன் கழிவுகளை சேர்கிறது. ஆனால் அதில், 429 டன் பிளாஸ்டிக் குப்பைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் உள்ள மாசு நிறைந்த நகரங்களாக மொத்தம் 476 என சர்வதேச நிறுவனம் ஒன்று கணக்கெடுத்துள்ள நிலையில், அந்த மாசு நிறைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை மாநகர் 61வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் டெல்லிக்கு அடுத்தபடியாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது. எனவே இந்த நிலையை தடுக்கும் வகையில், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தற்போது சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
அதன்படி, 40 மைக்ரான்களுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை சென்னையில் பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதையும் மீறி பயன்படுத்துவோர்களுக்கு அபராதம் உள்ளிட்ட பல தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், பொதுமக்கள் சுற்று சூழல் கருதி துணிப்பைகள் அல்லது காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 40 மைக்ரான்களுக்கு குறைவாக அளவுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களுக்கு எதிரான இந்தத் தடை அமல்படுத்தப்பட உள்ளது.
பிளாஸ்டி பைகளுக்கு ஏற்கனவே மதுரை மாநகராட்சி தடை விதித்து மதுரையில் 40 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டி பைகளை விற்பனை செய்து வரும் வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வருவது போல் சென்னையிலும் இனி அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
English Summary:From Aug-15 to Ban Plastic Bags.Chennai Corporation Action.