metroசென்னை நகரின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றான திருமங்கலம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், போக்குவரத்து நெருக்கடியை போக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அண்ணாநகர் 2–வது அவென்யூ மற்றும் முகப்பேர் ரோடு சந்திப்பில் ரூ.61 கோடி செலவில் கடந்த 20ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலம் கடந்த 2013ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் திருமங்கலம் மேம்பால பணிகளை திட்டமிட்டப்படி கட்டி முடிக்க இயலவில்லை.

இந்நிலையில் மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாகவும் இந்த மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தபோதிலும் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இந்த பணிகள் 90 சதவீத அளவுக்கு முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் இந்த மேம்பாலத்தின் பணி முற்றிலும் முடிவடைந்துவிடும் நிலையில் இருக்கும்போது, தற்போது திடீரென மீண்டும் மெட்ரோ ரயில் பணியால் மேம்பால பணிகள் இன்னும் இரண்டு மாதங்கள் காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

மேம்பாலத்தில் இருந்து சரிவுபாதைகள் அமைக்கும் இடத்தில் மெட்ரோ ரெயிலின் சுரங்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கபணியால் மேம்பாலம் அமைக்கும் பகுதியில் தாமதம் ஏற்படுகிறது. 9 மீட்டர் தூரத்துக்கு கீழ்தான் சுரங்கபணி நடைபெறுகிறது. இதனால் மேம்பாலம் பணியை அமைப்பதில் கவனமுடன் கையாளப்பட்டு வருகிறது.

English Summary:Chennai Metro Rail delay work on the flyover Tirumangalam.