velsஇந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழக மாணவர்கள் சர்வதேச கல்வித்தரத்தை குறைந்த கட்டணத்தில் பெறுவதற்காக மத்திய மாநில அரசுகளும், பல்வேறு கல்வி நிறுவனங்களும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில் சிங்கப்பூர் எம்.டி.ஐ.எஸ். மேலாண் மேம்பாட்டுக் கல்வி நிறுவனச் செயலர் ஆர்.தேவேந்திரன் அவர்கள் தமிழகத்திலும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சர்வதேசத் தரத்திலான கல்வியைப் பெற முடியும் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் எம்.டி.ஐ.எஸ்.மேலாண் கல்வி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் மற்றும், சிங்கப்பூர் எம்.டி.ஐ.எஸ். செயலர் ஆர்.தேவேந்திரன் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இதையடுத்து இருவரும் கூட்டாகசெய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் வெளிநாட்டுக் கல்வியைக் கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.பி.ஏ. உள்ளிட்ட 10 பட்டப் படிப்புகளை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு அந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் முதலாண்டு படிப்பை வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும், இரண்டாம் ஆண்டு படிப்பை சிங்கப்பூரிலும் கற்று பட்டம் பெறலாம். இதன் மூலம் சர்வதேசத் தரக்கல்வியைக் குறைந்த செலவில் பெற முடியும். நிகழ் ஆண்டில் எம்.பி.ஏ. படிப்பில் 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் எம்.டி.ஐ.எஸ். நிறுவன இயக்குநர் ஏ.சுப்ரமணியன், வேல்ஸ் பல்கலைக்கழ துணைவேந்தர் வி.தமிழரசன், நிர்வாகிகள் ஜோதிமுருகன், எஸ்.சிவசுப்ரமணியன், ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

English Summary:M.B.A in International Standard.Vels University.New Try.