தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில், பொது மேலாளர் / துணை பொது மேலாளர் (ஐடி) – என்ற பணிக்கு 2 வருட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு குறைந்தது, 5 வருடம் துறைசார்ந்த அனுபவமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:

தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 28.01.2019

பணி : பொது மேலாளர் / துணை பொது மேலாளர் (ஐடி)
ஒப்பந்தம் – 2 வருடங்கள்

வயது: 45 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: பொது மேலாளர் – மாதம் 1,40,000 ரூபாய்
துணை பொது மேலாளர் (ஐடி) – மாதம் 1,25,000 ரூபாய்

முன் அனுபவம்: பொது மேலாளர் / துணை பொது மேலாளர் (ஐடி), என்ற பணிக்கு பொது / தனியார் வங்கித் துறையில், குறைந்தபட்சம் 5 வருடங்கள் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பயிற்சி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலமே இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்தத் தேர்விற்கான முகவரி, தேதி மற்றும் நேரம் போன்ற தகவல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக வங்கியில் இருந்து அழைத்து தெரியப்படுத்தப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd.
Head Office, # 57, V. E. Road,
Thoothukudi 628 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு மற்றும் தேர்வு செய்யப்பட்ட / தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, தபால் வழியாகவோ / மின்னஞ்சல் வழியாகவோ நேர்காணலின் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். எந்த நேரத்திலும், எந்த விண்ணப்பத்தையும் நிராகரிக்க வங்கிக்கு உரிமை உண்டு. இதில் வங்கியின் முடிவே இறுதியானது.

இது குறித்து மேலும் அறிந்துகொள்ள https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_GIT20181904.pdf – என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *