தனியார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளித்து வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஆவின் பால் நிறுவனம், பால் மட்டுமின்றி நெய்,வெண்ணெய் மற்றும் பால் சம்பந்தப்பட்ட இனிப்பு பொருட்களையும் நுகர்வோர்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் குலோப் ஜாமூனுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது 500,250,125 கிராம் கொள்ளளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் குலோப் ஜாமுன்களில், 125 கிராம் கொள்ளளவு கொண்ட குலோப் ஜாமூனை மட்டும் புதிய பேக்கிங்கில் விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, “அண்மைக்காலமாக, ஆவின் உற்பத்தி செய்யும் பால், நெய்,வெண்ணெய், இனிப்பு உள்ளிட்ட பால், பால் சார்ந்த பொருள்களுக்கு நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது 500, 250 கிராம் பேக்கில், ரூ.220, ரூ.115 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றை புதிய பேக்கில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

அதாவது, நுகர்வோர் எளிதில் உண்பதற்கு வசதியாக 125 கிராம் கொள்ளளவு கொண்ட புதிய பேக் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய குலோப் ஜாமூன் பேக்கில் சிறப்பம்சமாக ஃபோல்டிங் டைப் ஸ்புன்ன் ஒன்று உள்ளே வைக்கப்பட்டிருக்கும். இதனால், குலோப் ஜாமூனை நுகர்வோர் வாங்கும் இடத்திலேயே எளிதாக உண்ண முடியும் என்று கூறினார்.

English Summary: Gulob Jamun Sweet is available in New Pack: Aavin