மிகுந்த இட நெருக்கடிகளுக்கு மத்தியில் இதுவரை சட்டப்பேரவை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த உள்துறை, வருவாய்த்துறை, நிதித்துறை ஆகிய துறைகளின் சில பிரிவுகள் தற்போது நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு விரைவில் மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தமிழக தலைமைச் செயலகம், சட்டப்பேரவை, துறை அலுவலகங்கள், அரசு அருங்காட்சியகம், பாதுகாப்புத்துறை அலுவலகங்கள் ஆகியவை தற்போது செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில்  சட்டப் பேரவை கட்டிடம் மற்றும் அதை அடுத்து உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இட நெருக்கடியுடன் ஒருசில அலுவலகங்கள் இயங்கி கொண்டிருந்த்தால் இந்த  இட நெருக்கடியை போக்க சமீபத்தில் திட்டமிடப்பட்டது. இதன்படி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் முன் மற்றும் பின்பகுதிகளில் விரிவாக்கம் செய்து அழகுபடுத்தும் திட்டம், சட்டப்பேரவை செயல்படும் கட்டிடத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டன.

நாமக்கல் கவிஞர் மாளிகையை ரு.28 கோடி செலவில் விரிவுபடுத்த கடந்த 2012ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த கட்டிடம் திறக்கப்பட்டது. இதில் மின் கட்டமைப்பு வசதிகள் மட்டும் ரூ.13.50 கோடியில் மேம்படுத்தப்பட்டன. இந்நிலையில் கட்டுமானப் பணிகள் முடிந்து நாமக்கல் கவிஞர் மாளிகை விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தலைமை செயலக அதிகாரி ஒருவர் கூறும்போது, “சட்டப்பேரவை கட்டிடத்தில் உள்துறை, நிதி, வருவாய், தேர்தல் பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகையில் இட வசதி அதிகரித்துள்ளதால், ஆங்காங்கே செயல்பட்டு வந்த ஒரே துறை அலுவலகங்கள் ஒரே பகுதிக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் சில தளங்களில் காலியிடம் கிடைத்துள்ளது. இந்த இடங்களில் சட்டப்பேரவை கட்டிடத்தில் இட நெருக்கடியுடன் செயல்பட்டு வரும் சில துறைகளின் அலுவலகங்கள் மாற்றப்படுகின்றன. ஏற்கெனவே உள்துறையின் கீழ் வரும் மது விலக்கு மற்றும் கலால் துறை இந்த கட்டிடத்தில்தான் செயல் படுகின்றன. அதேபோல் இட நெருக்கடியால் சட்டபேரவை கட்டிடத்தில் நடைபாதையில் செயல்பட்ட சில பிரிவுகள் இங்கு மாற்றப்படுகின்றன. சட்டப் பேரவை மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடங்களுக்கு இடையில் 2-வது தளத்தில் இணைப்பு பாதை உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுத்துறை செய்து வருகிறது.

 

English Summary: Some of the departments in Tamilnadu Legislative Assembly are transferred to other place in this critical situation.