பழம்பெரும் நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரனும், நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகனுமான சதீஷ் என்பவர் நேற்று நீச்சல்குளத்தில் மூழ்கி பரிதாபமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 44.

எம்.ஆர்.ராதா நடித்த புகழ்பெற்ற திரைப்படமான ‘ரத்தக்கண்ணீர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க சதீஷ் முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும், இந்த படத்திற்கு லொகேஷன் பார்க்க குன்றத்தூர் அருகில் உள்ள ஒரு பங்களாவுக்கு நேற்று மாலை சதீஷ் தனது நண்பர்களுடன் சென்றார். பின்னர் அங்கிருந்த நீச்சல்குளத்தில் குளித்து கொண்டிருந்த சதீஷுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார்.

இதனை அறிந்த அவருடைய நண்பர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் சிகிச்சையில் பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

English Summary: Sathish, Actor M.R.Radha’s grandson and Son of M.R.R.Vasu died yesterday due to hard breathing while he is in swimming pool.