‘டார்லிங்’ படம் மூலம் நடிகராக மாறிய பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் பென்சில், த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்திற்கு முதலில் ‘பாட்ஷா என்ற ஆண்டனி’ என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தலைப்பிற்கு ‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது ‘புரூஸ்லீ’ என்று மாற்றப்பட்டுள்ளது. ‘பசங்க’ பட இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை இயக்குகிறார்.
ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நடிப்பது மட்டுமின்றி இசையமைக்கவும் உள்ளார். டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ என ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படங்கள் அனைத்துமே வித்தியாசமாகவும், அனைவரையும் கவரும் விதமாகவும் டைட்டில் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. டைட்டில் புரூஸ்லீ’ என்று இருந்தாலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடிப்படம் என இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
English Summary : After ‘Darling’, ‘Pencil’, ‘Trisha illana Nayanthara’, kenanya films produce G.V.Prakash next film ‘Brece lee’.