விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னை அருகே உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு முக்கிய விருந்தினர்கள் யார் யாரை அழைப்பது என்பது குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்ரீமந்துடு’ என்ற திரைப்படம் முதன்முதலில் தமிழிலும் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளதால், ஆகஸ்ட் 2ஆம் தேதி அந்த படத்தின் புரமோஷனுக்காக மகேஷ்பாபு சென்னைக்கு வரவுள்ளார். எனவே அவரையும் ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டுக்கு அழைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் புலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுகு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. புலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவி தனிப்பட்ட முறையில் சிரஞ்சீவிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவருடைய அழைப்பை ஏற்று சிரஞ்சீவி இந்த விழாவில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Chiranjeevi-Mahesh Babu to attend “Puli” audio launch in Chennai beach resort.