தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மும்முரமாக இயங்கி வருகிறது. இதன் காரணமாக தேர்தல் தினத்தன்று அனைத்து தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தரமணியில் உள்ள டைட்டல் பார்க் தொழில்நுட்ப பூங்காவில் நேற்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா, இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். பின்னர் அவர் தலைமையில் டைட்டல் பார்க்கில் பணிபுரியும் மென்பொருள் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் இணை ஆணையர் எம்.ரவிசங்கர், துணை ஆணையர் உ.லட்சுமி காந்தன், டைட்டல் பார்க் மேலாண்மை இயக்குநர் சண்முக சுந்தரம், வணிக மேலாளர் என்.விஸ்வ நாதன் ஆகியோர் கலந்துகொண்ட னர். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார்களை அளிக்க ஏதுவாக மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை, தொழிலாளர் துணை ஆணையர் தலைமையில் உருவாக்கப்பட் டுள்ளது.
மேலும் தேர்தல் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த புகார் தெரிவிக்க: மாநில தொழிலா ளர் துணை ஆணையர் உ.லட்சுமி காந்தன் : 9445398801, 9445398695, 9445398694, 044-24335107. சென்னை (வடக்கு) தொழிலாளர் ஆய்வர் கிரிராஜன்: 9445398738. சென்னை (தெற்கு) தொழிலாளர் ஆய்வர் எஸ்.நீலகண்டன்: 9445398739. சென்னை (மத்தி) தொழிலாளர் ஆய்வர் ந.வாசுகி: 9445398740 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary : Helpline number for those who work on May 16 because of the company not offering holiday.