இந்துஸ்தானி இசையை சென்னையில் முறையாகப் பயிற்றுவிக்கும் பள்ளியாக விளங்குவது, பிரபல ஷெனாய் வாத்தியக் கலைஞர் பண்டிட் பாலேஷ் நடத்தும் ‘தான்சேன்’ இசைப் பள்ளி. இப்பள்ளியின் சார்பில் சென்னை தத்வலோகா அரங்கில் ‘தான் உத்சவ்’ இசை விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
பண்டிட் பாலேஷ், டாக்டர் கிருஷ்ணா பாலேஷ், பிரசாத் பாலேஷ் ஆகியோரிடம் இந்துஸ் தானி இசை பயிலும் 175 மாணவர்கள் 45 குழுக்களாகப் பிரிந்து பாட்டியாலா, குவாலியர், கிரானா கரானா பாணி இசையை வழங்கினர்.
2 முதல் 60 வரை: இந்த ஒருநாள் நிகழ்வில் 2 வயதே நிரம்பிய சினேகா பாலேஷ் முதல் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், பிரபலங்களின் குழந்தைகள், 60 வயது குடும்பத் தலைவிகள் வரை பலரும் பங்கேற் றுப் பாடியது புதிய அனுபவமாக இருந்தது.
தென்னிந்தியாவின் பாரம்பரிய கர்னாடக இசையை பெரிதும் விரும் பும் சென்னையிலேயே இவ்வளவு மாணவர்கள் இந்துஸ்தானி இசையை கற்கிறார்கள், ரசிக்கிறார் கள் என்பது வியக்க வைத்தது. அது மட்டுமின்றி, இந்தியாவின் கலாச்சார தலைநகர் சென்னையே என்பதை மீண்டும் உறுதிசெய்வது போல இருந்தது.
ஒருநாள் முழுக்க நடந்த இந்துஸ்தானி இசை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது டாக்டர் எஸ்.பாலேஷ், டாக்டர் கிருஷ்ணா பாலேஷ், பிரகாஷ் பாலேஷ் (ஹார்மோனியம்), சுரேஷ் ராஜ் (தபேலா) ஆகியோர் இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சி.
இசையின் மொழியில் கேள்வி-பதிலுடன் கூடிய உரையாடலாக அமைந்த அவர்களது வாசிப்பு, ரசிகர்களுக்கு புதிய அனுப வத்தை தந்தது.