சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களுக்கு இன்று முதல் அதாவது அக்டோபர் 17 முதல் அக்டோபர் 25 வரை தசரா விடுமுறை நாள்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அக்டோபர் 20-ஆம் தேதி மட்டும் விடுமுறைக் கால நீதிமன்றம் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் (பொது) பொன்.கலையரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 25 வரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விடுமுறைக்கால அலுவலர்கள் மட்டும் செயல்படுவர். அவசர வழக்குகளுக்கான மனுக்களை அக்டோபர் 19ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அக்டோபர் 20ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை விடுமுறைக்கால நீதிமன்றம் இயங்கும்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் டி.மதிவாணன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வும், மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் சி.டி.செல்வம், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வும் விசாரணை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English summary – Dasara holidays for the Madras High Court from October 17 to October 25.