டெங்கு காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி, செய்தியாளரிடம் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல்: இது டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சலாகும்.

எப்படி பரவுகிறது? நல்ல நீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவுகிறது.

கொசு உற்பத்தியாகும் இடம்: டயர், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், திறந்த கிணறு, பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் கப்களில் தேங்கும் நீரில் உருவாகிறது. ஏடிஸ் கொசு மூன்று வாரம் உயிர் வாழும். இந்த மூன்று வார காலத்தில் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளையிட்டு இனப்பெருக் கம் செய்கிறது. ஏடிஸ் கொசு பகலில் மனிதர்களை கடிக்கும் தன்மையுடையது.

காய்ச்சலின் அறிகுறிகள்: காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறி களாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும் தன்மை உடையது. ரத்த தட்டணுக் களின் எண்ணிக்கை குறையும் போது நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர் பாதையில் ரத்த கசிவு ஏற்படும்.

கவனிக்க வேண்டியவை: டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருத்துவ சிகிச்சைப் பெற வேண் டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்கி உட் கொண்டாலோ, போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

எவ்வாறு குணப்படுத்தலாம்?: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை யும், முறையான கவனிப்பும் கொடுத்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம். டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற் றும் மருத்துவ மனையில் கொடுக்கப் படும் உயிர்காக்கும் ஓஆர்எஸ் கரைசல் போன்ற நீராகாரம் தேவை யான அளவு கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் நின்ற பின்னர் மூன்று நாட்களுக்கு மிகவும் கவன மாக இருக்க வேண்டும். பசி எடுக்க வில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் டாக்டரிடம் செல்ல வேண்டும்.

வராமல் தடுக்க: டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் இடங் களை அழிக்க வேண்டும். வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை யாக வைத்துக் கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: டெங்கு காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக சிறப்பு காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.

டெங்கு காய்ச்சல்: காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *