சமீபத்தில் நடிகை விசாகாவை டுவிட்டரில் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் கேட்ட ஒரு கேள்விக்கு விசாகா துணிச்சலாக பதிலடி கொடுத்த பரபரப்பே இன்னும் முடியாத நிலையில் சுப்பிரமணியபுரம்’ நடிகை ஸ்வாதியும் இதுபோன்ற ஒரு பதிலடியை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடிகை ஸ்வாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்த ஒரு ரசிகர், “இது போல படங்களை போடவேண்டாம் ஆன்ட்டி போல இருக்கின்றீர்கள்’ என்று கூறியிருந்தார். இதற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த ஸ்வாதி, “‘நான் ஆன்ட்டிதான். சங்கடப்படும் அளவிற்கு ஆன்ட்டி என்ற வார்த்தை ஒன்றும் கெட்ட வார்த்தையில்லை. உன் போன்றவர்களுக்குத்தான் இயல்பாக இருப்பது பிரச்னை. எப்போதும் பதினாறு வயது தோற்றத்துடன் இருக்க முடியுமா என்ன? பத்திரிகைகள், சோஷியல் மீடியாக்கள் நிர்ணயித்துள்ள எடையை விட நான் அதிக எடையுடன் இருப்பதால் ஆன்ட்டி என்று சொல்வீர்களானால் நான் ஆன்ட்டிதான். அதில் எனக்கு பெருமையே தவிர பிரச்னை ஏதுமில்லை. புரியுதா அங்கிள்? உன் இலவச அட்வைஸ் எல்லாம் எனக்குத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ‘இந்த நபரின் கிண்டலை நான் கடந்து போக விரும்பவில்லை. இது போன்று கமெண்டுகளைப் போடுபவர்களுக்கான ஒட்டுமொத்த பதில் இது. நான் சின்ன வயது முதல் பார்த்து வளர்ந்த ஆன்ட்டிகள் எல்லாம் அற்புதமான பெண்கள். நானும் அவர்களைப் போலத்தான். எனவே ஆன்ட்டிகளை குறைத்து மதிப்பிடவேண்டாம்’ என்றும் கூறியுள்ளார்.

English Summary : Swathi Reddy outraged when someone mentioned her Aunty in her facebook photo comment.