சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகள், ஆவணங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை இழந்து தவித்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்து பயணம் செய்வோர் அடையாள அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வரும் நிலையில் ஏராளமானோர் தங்கள் அடையாள அட்டையை வெள்ளத்தில் இழந்திருப்பதால், ரயில் பயணத்தின்போது அசல் அடையாள அட்டை தேவை இல்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இது குறித்து ரயில்வே முதன்மை வர்த்த மேலாளர் அனைத்து டிக்கெட் பரிசோதகர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”சென்னையில் அண்மையில் பெய்த மழையால் பெரும்பாலான மக்களின் அசல் அடையாள அட்டைகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால், சென்னையிலிருந்து புறப்படும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் அசல் அடையாள அட்டையை காண்பிக்கமாறு டிசம்பர் 22-ம் தேதி வரை வலியுறுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
English summary-Id proof not required for chennai train travellers