trains-101215-1சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வரவேண்டிய இணை ரயில்கள் வராததால், 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கீழ்க்கண்ட மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1. வாரம் மும்முறை இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி கத்ரா – அந்தமான் எக்ஸ்பிரஸ்

2. வாரம் ஒருமுறை இயக்கப்படும் சென்னை எழும்பூர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ்

3. வாரம் ஒருமுறை இயக்கப்படும் கன்னியாகுமரி-திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ்

மேலும் ளிர்கால கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, சென்னையிலிருந்து மங்களூருக்கும், ராமேசுவரத்திலிருந்து செங்கல்பட்டுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் மற்றொரு செய்திக்குறிப்பில் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது. சிறப்பு ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு:

சென்னை சென்ட்ரல்- மங்களூரு: சென்னையிலிருந்து டிசம்பர் 24-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும்.

மங்களூரு- சென்னை: இந்த ரயில் மங்களூரில் இருந்து டிசம்பர் 25-ஆம் தேதி காலை 10.30 மணிக்குப் புறப்படும்.

இந்த அதிவிரைவு சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொர்ணூர், குட்டிபுரம், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணனூர், பய்யனூர், காசர்கோடு ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

ராமேசுவரம்- செங்கல்பட்டு: இந்த ரயில் டிசம்பர் 25, ஜனவரி 1, 8 ஆகிய தேதிகளில் ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும்.

செங்கல்பட்டு- ராமேசுவரம்: இந்த ரயில் டிசம்பர் 26, ஜனவரி 2, ஜனவரி 9 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும்.

இந்த வாராந்திர சிறப்பு ரயில் மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English summary-Superfast special trains between Chennai Central – Mangalore Jn