தமிழகத்தில் காது கேளாதவர்களுக்கான சிறப்புப் பட்டப் படிப்புகள் சென்னையில் உள்ள புனித லூயிஸ் தனியார் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்கு பி.காம்., பி.சி.ஏ. என்ற இரண்டு பட்டப் படிப்புகள் மட்டும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் படிப்புகளில் சேர ஒவ்வொன்றுக்கும் ஆண்டும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்ற நிலையில் இந்த கல்லூரியில் 15 இடங்கள் மட்டுமே தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காது கேளாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதால், நிரந்தர கூடுதல் இடங்களை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் கடந்த சில நாட்களாக எழுந்து வந்தன.
இதனை தொடர்ந்து தமிழக அரசு தற்போது உள்ள 15 இடங்களுடன் கூடுதலாக 15 இடங்கள் வரை நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்துள்ளதாக மாநிலக் கல்லூரி உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு துறைகளிலும் பேராசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 3 கூடுதல் பேராசிரியர் இடங்களை உருவாக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary :hearing loss Peoples in State College