பொதுத்துறை வங்கிகளில் வேலை
பதவி: Clerical (பொதுத்துறை வங்கிகள்)
காலியிடங்கள்: 7,275 (தமிழகத்தில் மட்டும் 792 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன)
வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐபிபிஎஸ் நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், வேலூர், புதுச்சேரி.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018 முதல் 16.12.2018 வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_Clerks_8_1.pdf என்ற வலைதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.10.2018