இந்திய ரயில் சேவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் தொடர்புகொள்ள ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 139 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அனைத்து விதமான சேவைகளையும் பெறமுடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 182 என்ற ஹெல்ப்லைன் எண் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி நிறுத்தப்படும் எனவும் புதிய ஹெல்ப்லைன் எண், 12 மொழிகளில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அனைத்து விதமான மொபைல் போன்களில் இருந்தும் இந்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காணவும் தங்களுக்கு உள்ள குறை மற்றும் புகார்களை ரெயில்வே நிர்வாகத்திடம் இயலாமல் பயணிகள் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் அதற்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த இந்த ஹெல்ப்லைன் எண் உதவும் என கூறப்படுகிறது