8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறும் வீரர்களின் ஏலம் பெங்களூருவில் துவங்கியது. இதில் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, பெங்களூரு அணியின் விஜய் மல்லையா, மும்பை அணி சார்பில் உரிமையாளர் நீடா அம்பானி, கும்ளே, பாண்டிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சென்னை அணி சார்பில் பயிற்சியாளர் பிளமிங், ராஜஸ்தான் சார்பில் டிராவிட், லட்சுமணும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற ஏலத்தில் ஐபில் வரலாற்றில் முதல் முறையாக அதிரடி வீரர் யுவராஜ் சிங்கை ரூ.16 கோடிக்கு டில்லி அணி ஏலம் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் ரூ.10.5 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் மேலும் முரளி விஜய்யை ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

English Summary: IPL 8 auction starts today in Bangalore. top bids are Yuvaraj Singh for 16 crores by Delhi Daredevils, Dinesh Karthik for 10.5 crores by Bangalore, Angelo Mathews for 7.5 crores by Delhi Daredevils.