கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டதாகவும், அதன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாகவும் நேற்று செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடக்கப்படவில்லை என்றும், வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ரயில்வே வாரியத்தின் (டிராபிக்) உறுப்பினர் முகமது ஜம்செத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் உறுப்பினர் முகமது ஜம்செத் மேலும் கூறும்போது, “ஐஆர்சிடிசி இணையதளம் முடக்கப்படவில்லை, அதிலிருந்து எந்த தகவலும் திருடு போகவில்லை என்பது சைபர் வல்லநர் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வல்லுநர்கள் குழு மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பாதுகாப்பாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.
English Summary : IRCTC website will not freeze. Railway Board Member announced.