ஆன்மீக மகான் ஸ்ரீராமானுஜர் பூமியில் அவதரித்து 1000 ஆண்டு தொடங்கியதை கொண்டாடும் வகையில் ‘ஸ்ரீராமானுஜர் தரிசனம்’ என்ற தொடர் மேடை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில், ஸ்ரீ உ.வே.கருணாகராச்சாரியார், வேளுக்குடி கிருஷ்ணன், தாமல் ராமகிருஷ்ணன், அனந்த பத்மநாபாச்சாரியார், அக்காரக்கனி ஸ்ரீநிதி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் விதமாக ‘ஸ்ரீராமானுஜர் தரிசனம்’ என்ற தொடர் மேடை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

சென்னை டிடிகே சாலையில் உள்ள நாரதகான சபாவில் இசை, நடனம், ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவை வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை, அனைத்து நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். ஸ்ரீராமானுஜரின் அவதார நோக்கம், அவரது ஆன்மிக சிந்தனைகள், அவர் இறைவன் மீது கொண்டிருந்த நம்பிக்கை, மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய உரைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும்.

சென்னையை சேர்ந்த கவுஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், பக்திசாகரம் டாட் காம் இணையதளம் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. இதுகுறித்து கவுஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சோனியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘வைணவ வழியில் வந்த அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதன் அடுத்தகட்டமாக, ஸ்ரீராமானுஜரின் போதனைகளை தமிழில் மொழி பெயர்த்து, பொதுமக்கள் அனைவருக்கும் குறிப்பாக, இளைஞர்களுக்கு கொண்டு செல்ல உள்ளோம்’’ என்று கூறினார்.

English Summary : Sri Ramanujar 1000th year Inauguration grandly planning in Chennai.