உலகத்திலேயே இரண்டாவது பெரிய இராணுவமான இந்திய இராணுவம் தற்போது, ஆட்களை அதிகரிக்கும் முனைப்பில் உள்ளது. உடல்தகுதி, சிந்திக்கும் திறன் மற்றும் திறமை வாய்ந்த இளைஞர்கள் இராணுவத்திற்கு தேவையாக உள்ளனர். தகுதிவாய்ந்த இளைஞர்கள் தேசப்பணிக்கு தேவையென்பதால் ஐடிஐ மற்றும் பொறியியியல் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க இராணுவம் நடவடிக்கைககளை மேற்கொள்ளவுள்ளது.
பிரிகேடியர் சங்க்ராம் டால்வி, எஸ். எம்., டெபுடி டைரக்டர் ஜெனரல், பணி நியமன தலைமையகம், சென்னைப் பிரிவு, பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: இராணுவத்திற்கான இந்த ஆட்சேர்ப்பு முறை எந்தவொரு இடைத்தரகர்களின் தலையீடு, மற்றும் பரிந்துரைகள் இல்லாமல் ஒளிவுமறைவுமின்றி நடத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கும் முறை பல கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளத்தால் இதில் முறைகேடுகளுக்கு சற்றும் வாய்ப்பிருக்காது. மேலும் பயோ மெட்ரிக் பரிசோதனை, கல்வி சான்றிதழ்களை பலகட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்துவது போன்ற நடிவடிக்கைகள் இதில் சிறப்பம்சங்களாகும்.
மேலும் அவர் கூறுகையில்: அதிகமாக பொறியியல் மாணவர்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்கலிளிருந்தே வெளிவருவதால், 17 ½ முதல் 23 வயது நிரம்பிய இவ்விளைஞர்களை கவனத்தில்கொண்டு இவ்வாளெடுப்பு நடத்தப்படவுள்ளது. சாதி, மதம் மற்றும் சமுதாயம் ஆகிய எதுவும் பாராமல் உடல்நலம், மருத்துவப் பரிசோதனை மற்றும் கல்வி இவற்றில் தகுதிபெரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். இவ்வருடம் 6000 பணியிடங்களை நிரப்பவுள்ளோம்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் (இராணுவத்தின்) அட்ஜுடன்ட் ஜெனரலின் கிளையான ஒருங்கிணைத்த தலைமையகம் மற்றும் அதற்கு கீழுள்ள பிற கிளைகளே இராணுவத்திற்கு ஆளெடுக்கும் இந்த முறையை திட்டமிடுகின்றன. டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ரெக்ரூட்டிங் – இராணுவத்தின் பணி நியமன ஆணையத்தின் முக்கிய அங்கமாகும். பரிந்துரைக்கப்பட்ட தகுதி பெற்றிருப்பவர்களில் சிறந்தவர்களை சேர்ப்பதே இவ்வாணையத்தின் முக்கிய நோக்கமாகும்.
தேர்ந்தெடுக்கும் முறை, கல்வி சான்றிதழ்களை சரிபார்ப்பதில் தொடங்கி, உடல் தகுதி, மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்துத் தேர்வு என பிரிக்கப்பட்டுள்ளது. இத்தனை சோதனைகளும் தகுதிவாய்ந்த இளைஞர்கள் இராணுவத்தில் நுழைவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிளான விளையாட்டு வீரர்கள் மற்றும் என் சி சி (தேசிய மாணவர் படை) சான்றிதழ்கள் வைத்துள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை, மற்றும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட தகுதியுடைய மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் ‘ஹவில்தார்’ மற்றும் ‘நாயிப் சுபேதார்’ ஆகிய பணிகளில் நேரடியாக அமர்த்தப்படுவார்கள்.
இந்த தேர்வு முறைகளில் தேர்ச்சிபெறும் இளைஞர்கள் நாடு முழுவதுமுள்ள பல்வேறு பயிற்றிடங்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு அங்கே முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படும். பின் இராணுவத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சிக்காலம் முடிவடைந்து பணியமர்ப்பதப்படும் ஒரு நபருக்கு, ரூபாய் 24, 000 முதல் 35, 000 வரை ஊதியம் வழங்கப்படும். கடுமையான பிரிவுகளில் அமர்த்தப்படும் நபர்களுக்கு ஊதியம் அதிகமாகக் கிடைக்கும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இலவச மளிகைப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல இலவச பயண வசதியும் உண்டு.
இராணுவத்தில் அதிகாரிகள் அல்லாது பிற வேலைகளுக்கான ஆளெடுக்கும் பணியினை இந்தியா முழுவதும் உள்ள பிற மண்டலங்களும் செய்கின்றன. ஒவ்வொரு பணி நியமன தலைமையகத்தின் அதிகார வரம்பில் இரண்டு அல்லது அதற்கும் மேலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஆண்கள் மக்கள் தொகையில் 10 % பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும். மேலும் பணியிடங்களின் எண்ணிக்கையானது, ஒய்வு பெறுபவர்கள், உயிரிழப்பு மற்றும் கூடுதல் தேவை இவைகளைப் பொருத்து மாறக்கூடும். இராணுவத்திலேயே பல பிரிவுகள் உள்ளதால், இவைகளின் செயல்பாடு சீராக அமைய ஒவ்வொரு பிரிவிலும் சரிசமமாக ஆட்கள் பணியமர்த்தப்படுகின்றனர். பணி நியமன தலைமையகம், சென்னையைப் பொறுத்தவரை, தமிழ் நாடு, ஆந்திரம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் ஆகியவற்றின் பணி நியமன பொறுப்பை ஏற்றுள்ளது.
இராணுவத்தில் வேலைவாய்ப்பை அளிக்கும் இவ்வாணையம் பொருத்தமான நபருக்கு மட்டுமே ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களை கையாளுவதற்காண பயிற்சியை அளிக்கக் கடமைப்பட்டுள்ளது. இவ்வமைப்பு அரசாங்கம், ஊடகம் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்போடு பணியற்றிவருகின்றது.