பிரபல இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனினும் மீண்டும் சூர்யா-லிங்குசாமி இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆனால் இம்முறை சூர்யா நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கப் போவதில்லை என்றும், தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அந்த படத்தை தயாரிக்க மட்டும் உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத்குமார் இயக்கவுள்ள ‘சதுரங்க வேட்டை 2’ படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த படத்தைத்தான் லிங்குசாமி தயாரிக்க உள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை உள்பட தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், சூர்யா ஏற்கனவே கமிட் ஆகியுள்ள 24, சிங்கம் 3 ஆகிய படங்களுக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.