சமீபகாலமாக ஜப்பான் தொழிலதிபர் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜப்பான் நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக மையங்களின் முக்கிய நகரமாக சென்னை விளங்கி வரும் நிலையில் தகவல் பரிமாற்றத்திற்காக ஜப்பான் மொழியை கற்க வேண்டிய அவசியம் சென்னை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்சி மொழி வகுப்புகளை நடத்த இந்தோ – ஜப்பான் தொழில் வர்த்தக நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மே மாதம் 10ஆம் தேதி முதல் ஜப்பான் மொழி பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் நடைபெறும் இந்த பயிற்சிக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இந்தோ-ஜப்பான் தொழில் வர்த்தக நிறுவனம் நேற்று வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
ஜப்பான் மொழி பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இந்தோ-ஜப்பான் வர்த்தக நிறுவனத்தை 044-24352010, 24354779 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். மேலும் [email protected] என்ற இமெயில் மூலமும், www.ijcci.com என்ற இணையதள முகவரி உதவியாலும் இந்த பயிற்சி வகுப்புகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Special Classes for Japan Language in Chennai.
