கடந்த நாளில் ஊடகங்கள் வெளியிட்ட ஏ. ஆர்.ரஹ்மானின் அறிக்கை என்னை மிகவும் வேதனை அடைய செய்தது. ரஹ்மான் பின்னால் போக கூடாது என்று பலரும் பாலிவுட் சினிமாவில் பிரச்சாரம் செய்வதாகவும், அப்போது தான் ஏன் தன்னை தேடி நல்ல படங்கள் வருவதில்லை என்றும் தெரிய வந்தது என்று கூறியிருந்தார் ரஹ்மான்.

என்னை பொறுத்த வரை ரஹ்மான் எனது சொந்த சகோதரனுக்கு நிகர். ரஹ்மானின் வளர்ச்சியில் மிகவும் பெருமை கொள்பவன் நான். அதற்கான உரிமையும் எனக்கு உண்டு. இருபத்தி ஏழு வருடத்திற்கு முன் 1993-ல் நான் தயாரித்த ஜென்டில்மேன் என்ற பிரமாண்ட படத்தின் மூலம், அப்படத்தின் பாடல் வாயிலாக தான் ரஹ்மான் உலக புகழ் பெற்றார்.

அதன் பின் தொடர்ச்சியாக எனது படங்களான காதலன், காதல் தேசம்,ரக்ஷகன் போன்ற படங்களும் அதன் பாடல்களும் ரஹ்மானின் மேலும் அவரது புகழுக்கும் வளர்ச்சிக்கும் தூண்டுதலானது. அதன் பிறகு பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் சென்று தனது சொந்த முயற்சியாலும் திறமையாலும் மிக பெரிய வெகுமதியான ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர்.ரஹ்மான் என்ற திறமை மிக்க கலைஞனை வளர விடாமல் பாலிவுட்டில் சிலர் முயன்றார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நான் அவர்களது இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

விருப்பமுள்ள கலைஞர்களை வைத்து படம் எடுப்பதும் எடுக்காமலிருப்பதும் தயாரிப்பாளர் மறறும் இயக்குனர்களின் விருப்பமும் உரிமயுமாகும். ஆனால் நல்ல கலைஞ்சர்களை புறக்கணிப்பது ம் ஏளனம் செய்வதும் , அவர்களது வளர்ச்சியை தடுப்பதும் நல்ல செயல் அல்ல.
தனிப்பட்ட முறையிலும் குடும்ப ரீதியாகவும் எனக்கு மிகவும் நெருங்கிய நட்பு உள்ளது.

அவரது திருமண வேளையில் நான் தான் அவருக்கு தலையில் டர்பன் அணிவித்து வாழ்த்தினேன்.இன்றும் உலகெங்கும் அவர் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் என் படத்திலுள்ள ஒட்டகத்தே கெட்டிக்கோ , சிக்கு புக்கு ரெயிலே, முக்கால முக்காபுலா, முஸ்தபா முஸ்தபா, ஊர்வசி … ஊர்வசி போன்ற பாடல்கள் இசைத்து ரசிகர்களை ஈர்த்து அவர்களை சந்தோஷப்படுத்துவது பார்க்கும்போது நானும் சந்தோஷப்பட்டு பெருமை கொள்வதுண்டு.

தன்னை அணுக எல்லோருக்கும் தன் வாசலை திறந்து வைத்திருக்கும் ரஹ்மானை பற்றி இப்படியொரு செய்தி பரவுவதில் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. என் படங்கள் மூலமாக புகழ் பெற்று, இந்திய சினிமாவுக்கும் உலக சினிமாவுக்கும் பெருமையாக விளங்கும் ஒப்பற்ற இசை கலைஞர் ஏ ஆர் ரஹ்மானை இப்படி அவமானப்படுத்தி புறக்கணித்ததில் பிறரை விட எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்களால் போற்றப்படும் அவர் இன்னும் வெகு தூரம் பயணித்து நிறைய வெகுமதிகளும் புகழும் அடைய வேண்டும் என்பதே எனது ஆசையும் பிரார்த்தனையும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *