சமீபத்தில் ரிலீஸான காக்கா முட்டை’ திரைப்படம் பல சர்வதேச விருதுகளை பெற்றதோடு, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றது. இந்த படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களான ரமேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய இரு சிறுவர்களும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றனர். இந்நிலையில் இந்த படத்தின் வசூலும் திருப்திகரமாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ரமேஷ், விக்னேஷ் ஆகிய இரண்டு சிறுவர்களும் கிரிக்கெட் விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்றும், குறிப்பாக தோனியை மிகவும் ரசிக்கும் ரசிகர்கள் என்றும் சமீபத்தில் தெரிய வந்தது. இருவருமே ஒருநாளாவது தோனியை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரின் ஆசையை ‘காக்கா முட்டை’ படத்தை வெளியிட்ட ‘பாக்ஸ் ஸ்டார்’ நிறுவனம் நிறைவேற்ற முடிவு செய்தது. கேப்டன் தோனியிடம் அப்பாயின்மெண்ட் வாங்கி சமீபத்தில் ரமேஷ், விக்னேஷ் ஆகிய இருவரையும் தோனியுடன் சந்திக்க ஏற்பாடு செய்தனர். இருவரையும் இன்முகத்துடன் வரவேற்ற தோனி, காக்கா முட்டை’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பின்போது இயக்குனர் மணிகண்டனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Kaaka Muttai team surprised their child actor’s by fixing an appointment to meet Dhoni, and the met him.