திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோயிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சியை வரும் 12ஆம் தேதி நடத்த கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

சென்னையின் பழமையான திருக்கோவிலும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணிபார்த்தசாரதி கோயிலில் கடந்த சில நாட்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செய்திருந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது. கோயில் விமானங்கள், ராஜகோபுரத்துக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் நடத்த தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூ. 5 கோடி மதிப்பில் கோயிலின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழமை மாறாமல் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2004-ஆம் ஆண்டில் கோயிலுக்கு சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டது. தற்போது வருகிற 12-ஆம் தேதி மீண்டும் விழா நடத்தப்படுகிறது. சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சி காலை 7 முதல் 8 மணிக்குள் நடைபெறும். காலை 11.30 மணிக்கு மேல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இனி அடுத்த 150 ஆண்டுகளுக்கு கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளத் தேவையில்லை. அந்த அளவுக்கு முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறை, அருங்காட்சியக துறை என பல துறைகளின் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் விழாவின்போது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. விழா நிகழ்ச்சியின் தினத்தில் 4 மாட வீதிகளிலும் வாகனங்கள் தடை செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.

English Summary : Triplicane Parthasarathy Temple organization to conduct Samproshanam on June 20.