‘உத்தம வில்லன்’ படத்தை அடுத்து கமல் நடித்து வரும் ‘தூங்காவனம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்தது. இந்த பர்ஸ்ட் லுக்கில் கமல் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஸ்டில் வெளிவந்தது என்பதை அனைவரும் அறிவோம்.

பர்ஸ்ட் லுக்கில் அந்த பெண்ணின் முகம் தெரியாமல் இருந்ததால் அனைவரும் கமலிடம் முத்தம் பெறுவது படத்தின் நாயகி த்ரிஷா என்றே நினைத்தார்கள். ஆனால் அது த்ரிஷா இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. கமலிடம் முத்தம் பெறும் அந்த நடிகை மதுஷாலினி.

பாலா இயக்கிய ‘அவன் இவன்’ என்ற படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த மதுஷாலினி அதன்பின்னர் தமிழில் நடிக்கவில்லை. தற்போது அவர் கமல் படத்தில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகிறார்.

கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்ரார். கமல்ஹாசனின் உதவியாளராக இருந்த ராஜேஷ் இயக்கும் இந்த படத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது.

English Summary : Madhu Shalini plays a role in Kamal’s next film “Thungavanam”.