Kakka_muttai_0605தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் சமீபத்தில் இரண்டு தேசிய விருதுகள் பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் எப்.எம் வானொலி நிலையத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இசை வெளியீட்டுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் இந்த படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இரண்டு குழந்தை நட்சத்திரங்களின் எதிர்கால கல்வி செலவு மு
ழுவதையும் இருவரும் இணைந்து ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும் தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய வெற்றிமாறன், மூன்றாவது முறையாக மீண்டும் தனுஷை இயக்கவுள்ளதாகவும், இந்த புதிய திரைப்படம் வரும் செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் வெற்றிமாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கிய இரண்டு படங்களும் ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.