தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகி வரும் படம் – மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை – யுவன் சங்கர் ராஜா.
இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் ஆரம்பித்துள்ளன. நாளை இப்படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்படவுள்ளது. டிசம்பரில் மாரி 2 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.