chennai-trade-centerசென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வணிக வர்த்தக மையத்தில் இளைஞர்களுக்கான சந்தைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருள்காட்சி நேற்று முதல் தொடக்கப்பட்டது. சென்னை ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை பிரபல நடிகர் சரத்குமார் திறந்து வைத்தார்.

இந்த பொருட்காட்சியின் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத்தின் சர்வதேச பிரதிநிதி காரன் வெண்ட்ஸ், மாவட்ட ஆளுநர் சி.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்துகொண்டு பேசினார். இதில், பல கல்லூரிகளின் சார்பில் கல்வி வழிகாட்டு மையம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சோலார் மின் சாதனங்கள் விளக்குகள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகள் இளைஞர்களையும் பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது. ரோட்டரி சங்கத்தின் சர்வதேச சுழற்சங்க இயக்குநர் ஜார்ஜ் பி.செரியன், தலைவர் ஸ்ரீதர், மாவட்ட சுழற்சங்க இயக்குநர் ராஜ்குமார் தேவராஜன் உள்ளிட்டோர் இந்த தொடக்கவிழாவில் பங்கேற்றனர்.

English Summary: Market Opportunity Exhibition for Chennai Youngsters. Actor Sarath Kumar inaugurated.