கடந்த தீபாவளி தினத்தில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ சூப்பர் ஹிட் படத்தை அடுத்து அவர் அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வருவதால் அடுத்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் உடல்நிலை குணமாகியுள்ளதை அடுத்து அஜித்தின் அடுத்த பட தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ‘வேதாளம்’ படத்தை இயக்கிய சிறுத்தை சிவா மீண்டும் அஜித் படத்தை இயக்குகிறார். அதேபோல் மீண்டும் அஜித் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த புதிய படத்தின் பூஜை அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி பூஜை போடப்படவுள்ளதாகவும், ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 2017ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு இரண்டு கதாநாயகிகள் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் முதல் கதாநாயகியாக அனுஷ்கா அல்லது நயன்தாரா நடிப்பார் என்றும் இரண்டாவது நாயகியாக தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகவும் இந்தியில் ஷாருக்கான் படத்திலும் நடித்த கிர்த்தி சனோன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

English Summary : After surgery Ajith is now ready to act. His next film pooja planed on his birthday May 1st.