தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதியுடன் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இந்ஹ இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 108 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டது. ஆனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளதாகவும், தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளை சேர்த்து மொத்தம் 13 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளை பொருத்தவரையில் இதுவரை 502 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளதாகவும், இதனால் சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 3 காலியிடங்கள், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள், மதுராந்தகம் அருகே கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள் உள்பட மொத்தம் 95 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
பி.டி.எஸ் படிப்புகளை பொருத்தமட்டில், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதில் உரிய காலக்கெடுவுக்குள் 65 மாணவர்கள் சேர்ந்து விட்டனர். எனவே இந்த கல்லூரியில் 20 அரசு பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
English Summary: MBBS and BDS government allotted seats vacant list. Totally 13 seats in MBBS and 20 seats in BDS are vacant in Tamilnadu Government Medical Colleges. In Private medical colleges 95 seats are vacant.