valu
பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சிம்புவின் ‘வாலு’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உறுதியாக ரிலீஸாகும் என விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ‘வாலு’ படத்தை தடை செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சிம்பு உள்பட ‘வாலு’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேஜிக் ரேஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எனவே எங்களைத் தவிர வேறு நபர் மூலமாக ‘வாலு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்”  என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. ஜூலை 17ம் தேதி வெளியாக இருந்த ‘வாலு’ படத்துக்கு இந்த வழக்கு பெரும் பின்னடைவாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.

நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது. சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியிருந்தார்.

 

English Summary : Valu Movie in Chennai court case to ban the film.