வரும் மே 15ஆம் தேதி சூர்யா, ஆர்யா படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சூர்யா நடித்து முடித்துள்ள ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக மே 15ஆம் தேதி என அறிவித்துள்ளார். சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இதேபோல் சமீபத்தில் தனியார் எப்.எம் வானொலி நிலையத்தில் இசை வெளியீட்டை சிறப்பாக நடத்திய ‘புறம்போக்கு என்னும் பொதுவுடமை’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான யூடிவியும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 15 என அறிவித்துள்ளது. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் நடித்துள்ள இந்த படத்தை இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதால் இப்பொழுது முதலே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தியேட்டர்களை புக் செய்யும் பணிகளை இரு நிறுவனங்களும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

English Summary : Movies from the May 15 clash Arya Surya ?