திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில், பார்வதி தேவி மயிலுருவில் சாப விமோசனம் பெற்று, சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில், திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
இந்தாண்டு வைகாசி பவுர்ணமியான இன்று இரவு, 8:00 முதல், 9:30 மணி வரை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தற்போது, ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளதால், ஆன்-லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் திருக்கல்யாண வைபவத்தை http://tnhrce.gov.in மற்றும் http:// mylaikapalees warar.tnhrce.in ஆகிய இணையதளம் மூலமாகவும், http://www.youtube.com/c/MYLAPOR EKAPALEESWARARTEMPLE என்ற யூடியூப் சேனல் மூலமாகவும் கண்டு தரிசிக்கலாம் என்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.