பாரம்பரியத்தில் வேரூன்றி, எதிர்காலத்தில் முதலீடு செய்து, தென்னிந்தியாவின் முன்னணி குடும்ப நகைக்கடைகளில் ஒன்றான என்ஏசி ஜூவல்லர்ஸ் இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், NAC ஜூவல்லர்ஸ், ஆனந்தம் அறக்கட்டளையின் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்கி, மறைந்த நிறுவனர் ஸ்ரீ என். ஆஞ்சநேயுலு செட்டிக்கு அஞ்சலி செலுத்தியது. மேலும் நீண்டகால பேட்ரான்களுக்காக கோல்டன் வீக் ஆஃப் செலிப்ரேஷன்ஸை அறிமுகப்படுத்தியது.
NAC ஜூவல்லர்ஸ்-ன் மறைந்த நிறுவனர், ஸ்ரீ என்.ஆஞ்சநேயுலு செட்டி தொடங்கிய இந்த நிறுவனம் ஐந்து தசாப்தங்களாக, தென்னிந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட கடைகளின் குழுவாக மாறியுள்ளது. அனைத்து இடங்களிலும் இருக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்காக கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பாரம்பரியம் மற்றும் சமகாலத்திற்கு ஏற்ப நேர்த்தியான நகைகளின் பிரத்யேக வரம்பைக் காட்சிப்படுத்துகிறது. ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட மறைந்த நிறுவனர், அவர் நம்பிய அனைத்து மதிப்புகளையும் கடைபிடித்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் அசைக்க முடியாத கவனம் செலுத்தி, NAC ஜூவல்லர்ஸின் அடித்தளத்தை அமைப்பதிலும் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் கவனமாக இருந்தார்.
அவரது பெருமையை போற்றும் வகையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கடையில் மறைந்த ஸ்ரீ என்.ஆஞ்சநேயுலு செட்டியின் மார்பளவு சிலையை என்ஏசி ஜூவல்லர்ஸ் இன்று திறந்து வைத்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ கே.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் மற்றும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஸ்ரீ ஐசரி கே.கணேஷ் கெளரவ விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் NAC ஜூவல்லர்ஸ், தலைவர், ஆனந்த பத்மநாபன் மற்றும் NAC ஜூவல்லர்ஸ், நிர்வாக இயக்குநர்கள், ஆனந்த ராமானுஜம் மற்றும் அர்ஜுன் வரதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாப்பூரில் உள்ள ஸ்டோர், NAC ஜூவல்லர்ஸின் முதல் அவுட்லெட் என்ற முக்கியத்துவத்தின் காரணமாகவும், பயணத்தைத் தொடங்கியதைக் குறிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சிக்காக இந்தக் கிளை தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேலும், NAC ஜூவல்லர்ஸ் 50 லட்சம் ரூபாயை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியது. இதில் 5 லட்சம் ரூபாயை சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கும், 5 லட்சம் ரூபாயை சங்கர நேத்ராலயாவிற்கும், மீத முள்ள 40 லட்சம் ரூபாயை சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் பயன்படும் வகையில் நன்கொடையாக வழங்கியது.
50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, NAC ஜூவல்லர்ஸ் அதன் அனைத்து கடைகளிலும் புதுவிதமாக ஆக்டிவிட்டீஸ் மற்றும் விளையாட்டுகளைக் கொண்ட கோல்டன் வீக்கை ஜூலை 1 முதல் 8 வரை நடத்துகிறது. பிரத்தியேக சலுகைகள் மற்றும் பரிசுகளைக் கொண்ட லாயல்டி திட்டத்தின் மூலம் நீண்டகால பேட்ரான்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
முன்னோக்கிப் பயணத்தைப் பார்க்கும் போது, NAC ஜூவல்லர்ஸ், போல்கி, ஜடாவ், விக்டோரியன் மற்றும் கெம்ப் நகை பாணிகளைக் கொண்ட, இந்திய வரலாற்றில் இருந்து புகழ்பெற்ற ராணிகளால் ஈர்க்கப்பட்ட, மகாராணி கலெக்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, இந்த பிராண்ட் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு முக்கிய நகரங்களை உள்ளடக்கிய கண்காட்சி சுற்றுப்பயணத்துடன் அமெரிக்காவிற்கு மீண்டும் வரவுள்ளது.