nayantara1402கோலிவுட் திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகைகளான நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகிய மூவரும் ஒரு குறும்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த குறும்படத்தை தேர்தல் ஆணையம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அனைவரையும் வாக்களிக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை பலவழிகளில் செயல்படுத்தி வரும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்பட பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு திரைப்படங்கள் இயற்றியுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வரும் நயன்தாரா, ஸ்ருதி ஹாஸன், சமந்தா, நடிகர் சித்தார்த் ஆகியோர்கள் நடிக்கவுள்ள குறும்படத்தை எடுக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். மேலும் தமிழக சட்டசபை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

English Summary: Nayantara, Samantha , Shruti Haasan Acting in Election Commission Short Film.