சிம் கார்டுகளை அதிகளவில் விற்பனை செய்வது, யார் விற்பனை செய்ய முடியும் என்பது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இனி புதிய சிம் வாங்க திட்டமிட்டால் அல்லது சிம் கார்டு விற்பனையாளராக இருந்தால் இந்த புதிய விதிகள் பின்பற்றுவது முக்கியம்.

  • இந்த விதிமுறைகளின் கீழ் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
  • ஏற்கனவே உள்ள நம்பர்களுக்கு சிம் கார்டுகளை வாங்கும் போது, உங்களின் ஆதார் மற்றும் அடையாள விவரங்களை சமர்பிக்க வேண்டும்.
  • இதேபோல சிம் கார்டை விற்பனை செய்வோரும் வெரிஃபிகேஷனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிம் டீலர்கள் விற்பனை செய்யும் சிம் கார்டுகளை ரெஜிஸ்டர் செய்வதோடு, அவர்களையும் வெரிஃபை செய்ய வேண்டும்.
  • புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்தால், அரசாங்கம் சார்பில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
  • ஒரு நபர் அதிக சிம் கார்டுகளை வாங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன் படி, தனிநபர் பயன்பாட்டுக்கு ஒருவர் தனது அடையாள சான்றினை பயன்படுத்தி அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்க முடியும்.
  • ஒருவரின் சிம் கார்டு செயலிழந்து போனால், அந்த நம்பர் அடுத்த 90 நாட்கள் வரை வேறு யாருக்கும் நிர்ணயம் செய்யப்படாது. இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் அந்த நம்பருடன் ஒருங்கிணைந்த தகவல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *