வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வரும் 12ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து வரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் 13 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.